2024 ஆம் ஆண்டில் வாகன பழுதுபார்ப்புக்காக மட்டும் 645 மில்லியன் ரூபாய் செலவு!
2024 ஆம் ஆண்டில் வாகன பழுதுபார்ப்புக்காக 645 ரூபாய் மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடைய வருடாந்திர விரிவான மேலாண்மை தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, ஆண்டு முழுவதும் 53 பழுதுபார்ப்பு சம்பவங்கள் காணப்பட்டன, சில வாகனங்கள் ஒரே ஆண்டில் 10 முதல் 17 முறை பழுதுபார்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
189 வாகனங்களுக்கு பழுதுபார்ப்பு செலவுகள் 1 மில்லியன் ரூபாய்முதல் 28 மில்லியன் வரை இருந்ததாகவும், அவற்றின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 1 மில்லியன் ரூபாய் முதல் 40 மில்லியன் ரூபாய் வரை இருந்ததாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகத்தின் தலைமை கணக்கியல் அதிகாரி, ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான பெரும்பாலான வாகனங்கள் 2016 க்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை என்றும், இப்போது 10 ஆண்டுகால பயன்பாட்டைத் தாண்டிவிட்டதாகவும் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
