வெலிகம துப்பாக்கிச்சூடு: துபாயிலிருந்து வந்த உத்தரவு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம - நாவின்ன பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதற்கு அரச புலனாய்வு சேவையும் ஆதரவு அளித்துள்ளது. இதனிடையே சந்தேகநபர் கைது செய்யப்பட்ட உடனே காவல்துறைக்கு பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதன்படி குறித்த காணொளியில், குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்த டுபாயிலிருந்து உத்தரவு கிடைத்ததாக சந்தேகநபர் கூறுகிறார். வெளிநாட்டிலுள்ள ஒரு தனிநபரிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பேரில், தான் செயற்பட்டதாக அவர் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவத்திற்கான முழுமையான நோக்கத்தைக் கண்டறியவும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக நபர்களை அடையாளம் காணவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
