வெலிகம துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் மற்றொரு நபர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர், அவர் காலி, ஹியாரே பகுதியைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முந்தைய நாள், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் காலி மற்றும் மாத்தறைக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நாளில், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததாகவும், தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் தப்பிச் செல்ல உதவியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ஒரு தொகையை வழங்கியதாகவும், அவரது உதவிக்காக ரூ. 20,000 பணம் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை, வெலிகம பிரதேச சபைத் தலைவரின் சமீபத்திய கொலை தொடர்பாக மூன்று நபர்களை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
