ஜே.வி.பிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கவனம்!

#SriLanka
Mayoorikka
3 hours ago
ஜே.வி.பிக்கும்  சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கவனம்!

மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.), சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக பிமல் ரத்நாயக்கவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் திணைக்களத்தின் தலைவர் லியு ஹைசிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதன் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் ஆண்டின் தொடக்கத்தில் இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் நடந்த சந்திப்பு மற்றும் அதில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான தற்போதைய முன்னேற்றம், அத்துடன் பேச்சுவார்த்தைகளின் வெற்றி குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

 புதிய சீனா நிறுவப்பட்ட பின்னர், நாட்டை ஸ்திரமாக கட்டியெழுப்புவதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றிய தியாகங்கள் மற்றும் பங்குகள் குறித்தும், அந்த நடவடிக்கைகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று நிலையான ஆட்சியைப் பேணுதல், கட்சி முற்போக்கான சீர்திருத்தங்களுடன் வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் கட்சி ஒழுக்கத்தைப் பேணுவதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

 மேலும், சமூக நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 ஜே.வி.பி.க்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!