ஹட்டன் – மஸ்கெலியா இடையே இயங்கும் தனியார் பேருந்துகள் பாதுகாப்பை புறக்கணிக்கின்றன!
ஹட்டனில் இருந்து மஸ்கெலியா நோக்கி இரவு நேரங்களில் இயக்கப்படும் சில தனியார் பேருந்துகள், பயணிகள் உள்ளே இருந்தபடியே மஸ்கெலியா எரிபொருள் நிலையங்களில் (பேட்ரோல் ஷெட்) நிறுத்தி டீசல் நிரப்பும் அபாயகரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஹட்டன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் பல தனியார் பேருந்துகளும் இதேபோன்று பயணிகள் உள்ளே இருந்தபடியே எரிபொருள் நிரப்பும் செயல்களில் ஈடுபடுகின்றன, இது பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.
எரிபொருள் நிரப்பும் போது தீப்பிடிப்பு அல்லது விபத்து ஏற்படும் அபாயம் மிக அதிகம் என்பதால், இந்தச் செயலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை அவசியமாகிறது.
அரசாங்க போக்குவரத்து துறை உடனடியாக இச்செயலை விசாரித்து, பாதுகாப்பு விதிகளை மீறும் பேருந்து உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் நாட்டின் ஜனாதிபதியின் கவணத்திற்கு கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
