நோயாளிகளுக்கான சட்ட ரீதியான உரிமைகள்

#SriLanka #Law #Patients
Prasu
3 hours ago
நோயாளிகளுக்கான சட்ட ரீதியான உரிமைகள்

"நோயாளிகளுக்கும் சட்ட ரீதியான உரிமைகள் உள்ளன என்பதை தெரியுமா?"

மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுத்தாலும், மரியாதையில்லாமல் நடந்து கொண்டாலும், தகவல் மறைத்தாலும் நீங்கள் சட்டப்படி நீதி கேட்க முடியும்.

இலங்கையில் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்கும் சட்டங்கள்

1. Patients’ Rights Charter – 1995 (Ministry of Health Circular 01-30/1995)
2. Medical Ordinance (Chapter 105) – மருத்துவர்களின் ஒழுங்குமுறை
3. Consumer Affairs Authority Act No.09 of 2003 – நோயாளி ஒரு பயனாளர்
4. Penal Code (Section 298) – மருத்துவ அலட்சியம் குற்றமாக கருதப்படும்
5. Sri Lanka Constitution – Article 11 & 12 – சம உரிமை + மனித மரியாதை
6. Right to Information Act No.12 of 2016 – மருத்துவக் கோப்பை பார்க்க உரிமை
7. Civil Law – Medical Negligence – இழப்பீடு கேட்க முடியும்

நோயாளிகளின் சில முக்கிய சட்ட உரிமைகள்

  • மரியாதையுடன் & பாதுகாப்பாக சிகிச்சை பெறும் உரிமை
  • உங்கள் நோய் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை
  • Informed Consent – அறுவை சிகிச்சைக்கு முன் நீங்கள் அனுமதி தரவேண்டும்
  • சிகிச்சையை நிராகரிக்க உரிமை உங்களுக்கு உண்டு
  • உங்கள் மருத்துவ தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும்
  • மற்றொரு மருத்துவரிடம் Second Opinion பெற உரிமை உண்டு
  • உங்கள் Medical Reports & Diagnosis Copy பார்க்கவும் பெறவும் உரிமை
  • பொருளாதார நிலை / மதம் / மொழி / இனம் காரணமாக வேறுபாடு காட்டக்கூடாது
  • தவறான சிகிச்சை / அலட்சியம் இருந்தால் புகார் செய்யலாம்
  • இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்

Medical Negligence - குற்றம் + சிவில் பொறுப்பு
Penal Code Section 298 -அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் தண்டனை
Consumer Affairs Act - தவறான சேவைக்கு நஷ்டஈடு கேட்கலாம்
Medical Ordinance - SLMC மூலம் மருத்துவருக்கு ஒழுக்க நடவடிக்கை

முக்கியம்:

01. எந்த மருத்துவமனையிலும் அரசு / தனியார் இதே உரிமைகள் உங்களுக்கு சட்டப்படி உண்டு
02. SLMC (Sri Lanka Medical Council) மற்றும் சுகாதார அமைச்சில் நீங்கள் நேரடியாக புகார் கொடுக்கலாம்.

"நோயாளியின் உரிமை காப்போம் – மனித மரியாதை காப்போம்"

நன்றி
சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!