தமது திருமணத்திற்கான பணத்தை வறுமையான குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டிக் கொடுத்த தம்பதி!

#SriLanka #House #ADDA #shelvazug #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
தமது திருமணத்திற்கான பணத்தை வறுமையான குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டிக் கொடுத்த தம்பதி!

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இளைஞனும் தனது காதலியும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். 

குறித்த இளைஞன் மக்கள் வங்கியில் பணியாற்றுகின்ற நிலையில் காதலி ஆயுர்வேத வைத்தியராகும். பிரபல ஹோட்டலில் இந்த இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர். 

எனினும் ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக பிரம்மாண்டமாக திருமணம் செய்து பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றிற்கு உதவுவதற்கு இருவரும் தீர்மானித்துள்ளனர்.

images/content-image/2024/08/1761194998.jpg



அதற்கமைய கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

கடந்த 2 மாதங்களுக்கு தங்கள் திருமணத்திற்காக சேமித்த பணத்தை கொண்டு இந்த வீட்டை நிர்மாணிக்க அவர்கள் ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


images/content-image/2024/08/1761195070.jpg

கடவுள் மனித வடிவில் இருப்பதனை தற்போதே பார்க்கின்றேன் என வீட்டில் குடியேறிய பெண் தெரிவித்துள்ளார்.

                                                                          

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!