பொருளாதாரம் வலுவடையும் போது வாகன வரி திருத்தம் குறித்து கவனம் செலுத்த முடியும்!

பொருளாதாரம் வலுவடையும் போது வாகன வரி திருத்தம் குறித்து கவனம் செலுத்த முடியும் என்றும், ஆனால் இந்த நேரத்தில் வாகன வரி திருத்தம் குறித்து எதுவும் அறிவிக்க முடியாது என்றும் இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதன் மூலம் மக்களின் கனவுகளை நிறைவேற்ற முடியும். தனிநபர்கள் அல்லது குடும்பங்களின் கனவுகளில் கவனம் செலுத்தும் அதே வேளையில், சீராக இயங்காத ஒரு நாட்டை நாம் கைப்பற்ற வேண்டியிருந்தது.
4 ஆண்டுகளாக வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இறக்குமதிக்கான சந்தை திறக்கப்பட்டது. அதிலிருந்து கிடைக்கும் வரி வருவாயின் மதிப்பீட்டோடு, நமது டாலர் இருப்புக்களை பாதிக்காது செயற்பட வேண்டும்.
நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளோம். வாகனம் வாங்குவதை எளிதாக்கியுள்ளோம். எதிர்காலத்தில் வரி திருத்தத்தில் கவனம் செலுத்துவோம். ஆனால் இப்போது அதைப் பற்றி பேச முடியாது." என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



