கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் இன்று (23) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.
இன்று காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான பகுதிகளிலும், பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐடிஹெச், கொட்டிக்காவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீரைப் பெறும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டியிருப்பதால், நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



