யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது!
#SriLanka
#Jaffna
Mayoorikka
1 month ago
யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று (22) குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர் இவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
