விவாகரத்து மனு தாக்கல் செய்யும் உரிமை யாருக்கு உண்டு - கணவன்? மனைவி?

விவாகரத்து வழக்கு மனைவி மட்டும் தான் கணவனுக்கு எதிராக தாக்கல் செய்ய முடியும்? இந்த கேள்வி இலங்கையில் மிகவும் பொதுவாக மக்கள் மத்தியில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள ஒரு விஷயம்.
சட்டபடி, இலங்கையில் விவாகரத்தானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணச் சட்டங்கள் மற்றும் அதன் பிந்தைய திருத்தங்களின் கீழ் செயல்படுகிறது.
இந்த சட்டத்தின் கீழ், விவாகரத்து மனுவை தாக்கல் செய்யும் உரிமை கணவன் மற்றும் மனைவி (BOTH HUSBAND AND WIFE) இருவருக்கும் சமமாக உள்ளது.
அதாவது மனைவி, கணவன் இருவரில் எவரும் ஒருவருக்கெதிராக ஒருவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யக்கூடிய சட்ட காரணங்கள்
- Adultery – சோரம்போதல்
- Malicious Desertion – விட்டு விலகிப் பிரிந்து செல்லல்
- Incurable Impotency at the time of marriage – திருமணத்தின் போது இருந்த சிகிச்சையளிக்க இயலாத பாலியல் தொடர்பான குறைபாடு.
- Constructive Malicious Desertion – மனரீதியாக கைவிடுதல் / குடும்ப பொறுப்பை நிராகரித்தல்
வழக்கு உதாரணம் (Case Law)
K. v. K (Sri Lanka Law Reports) இந்த வழக்கில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய உரிமை இருவருக்கும் சமமாக உள்ளது என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
விவாகரத்து என்பது ஒருவரின் உரிமை, பாலினம் பார்க்காது சட்டம் நடக்கும்.
"விவாகரத்து வழக்கு மனைவிக்கு மட்டுமே உரிமை" என்பது சட்டத்திற்கு எதிரான தவறான நம்பிக்கை!
நன்றி
சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
(வீடியோ இங்கே )



