கொழும்பு - பதுளை : இரவு நேர அஞ்சல் ரயில்கள் இரத்து!
#SriLanka
#Train
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் பிரதான ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்ட இரண்டு இரவு அஞ்சல் ரயில்கள் உட்பட ஐந்து ரயில்கள் இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட ரயில் அட்டவணை வருமாறு,
பிற்பகல் 03.35 மணி கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை
இரவு 08.30 கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை (இரவு அஞ்சல்)
பிற்பகல் 03.00 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை (இரவு அஞ்சல்)
மலையக ரயில் பாதையின் இருபுறமும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
