தவிசாளர் கதிரையில் சுடப்பட்டு இறந்தார் மிதிகம லசா: இவர் தொடர்பில் வெளியான திடுக்கிடும் பின்னணி

#SriLanka #GunShoot
Mayoorikka
3 hours ago
தவிசாளர் கதிரையில் சுடப்பட்டு இறந்தார் மிதிகம லசா: இவர் தொடர்பில் வெளியான திடுக்கிடும் பின்னணி

மாத்தறை, வெலிகம பிரதேசசபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் இறந்துள்ளார். 

பிரதேச சபை தவிசாளர் அறைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டதாக முதற்கட்ட தகவல். லசந்த விக்கிரமசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர். 

அவரது மரணம் தொடர்பில் பாராளுமன்றில் பேசிய சஜித் பிரேமதாச, பொதுப்பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். 

 விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்கின்றனர்.

 வெலிகம பிரதேச சபை சார்ந்த சில பின்னணிகள். 

 * வெலிகம பிரதேச சபையின் கன்னி அமர்வு 27.06.2025 அன்று கூடியபோது சபை வளாகத்தில் உறுப்பினர்கள் மோதல் இடம்பெற்றது. - அன்று தவிசாளர் தெரிவுக்காக சென்ற இரு NPP உறுப்பினர்கள் கடத்தப்பட்டிருந்தனர். 

 * வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டின்மீது 16.07.2025 அன்று துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டது. 

 யார் இந்த மிதிகம லசா (Midigama Lasa)?

 * தெற்கின் பாதாள உலகில் அறியப்பட்ட 38 வயதான ஒரு நபர். 

 * ஹரக் கட்டா எனப்படும் பாதாளகுழு தலைவனின் நெருக்கத்துக்குரிய ஒருவர். 

 * 2020 செப்டெம்பரில் கொலைச்சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட ஒருவர். 

 * 2025 இல் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வழக்கறிஞர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் உள்ளது. 

 வெலிகம பற்றிய அண்மைய செய்திகள்

 * சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் (22.09), ரஸ்ய நபரின் வழிகாட்டலில் இயங்கிய இடத்தில் மீட்கப்பட்ட மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்ட பிரதேசமே வெலிகம. அங்கே மோல்டா நாட்டவரும் கைதாகியிருந்தார். 

 * 24.09 அன்று, துப்பாக்கிகள், ரவைகள், போதைப்பொருட்களோடு பெண் உட்பட 2 பேர் வெலிகமவில் கைதாகினர். 

 * முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெலிகம பகுதியில் ஹோட்டல் அருகில் 2023ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். 

 ஆக மொத்தத்தில், மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அரசியல் அதிகார கதிரையில் இருந்த ஒரு குற்றப்பின்னணியான நபர் இன்று சுடப்பட்டு இறந்துள்ளார். இத்தகைய பின்னணியுள்ள ஒருவரை தவிசாளராக மட்டுமல்ல வேட்பாளராக நியமிக்கவேண்டிய தேவை ஏன் ஐ. ம. சக்திக்கு ஏற்பட்டது? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 நீதிமன்ற வழக்கும், பிடியாணையும் விதிக்கப்பட்டிருந்த போதும் அவரது பதவியை பறிக்காகததும், உறுப்பினர் பதவியை வறிதாக்காமல் விட்டதும் ஐ. ம. சக்தியின் பெரும் தவறு எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 பொதுப்பாதுகாப்பு குறித்து பாராளுமன்றில் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சித்தலைவர், இவற்றுக்கும் பொறுப்பேற்று அதே சபையில் விளக்கமளிக்க வேண்டியது கட்டாயமானது எனவும் கோரிக்கைக்கி விடுக்கப்பட்டுளள்து.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!