மன்னாரில் சுகாதாரத் திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது? சபையில் சிறிதரன் கேள்வி

மன்னார் நகரத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியால் திட்டமிடப்பட்ட சுகாதாரத் திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான வாக்கெடுப்பு அமர்விலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசினால் மேற்கொள்ளப்படும் நீர், சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்டவைக்குப் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அந்தத் திட்டங்கள் இப்போது ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் தெரிவிக்கையில்,
மன்னார் நகரிற்கு அருகிலே ஆரம்பிக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் திட்டத்தையே நாம் நிறுத்தியுள்ளோம். நீர் வழங்கல் சபையினால் ஆரம்பித்ததை நிறுத்தப்படவில்லை. என்று தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



