முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம்!

#SriLanka #Election #Province #Lanka4
Mayoorikka
9 hours ago
முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள்  தீவிர கவனம்!

மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாகத் திசைக்காட்டி சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது.

 குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறங்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

 NPP சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை, கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!