கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து! ஒருவர் பலி!
#SriLanka
#Colombo
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
9 hours ago

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (22.10) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
மதவாச்சி பிரதான வீதியில், ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



