வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! அதிகாரிகளினால் மீட்பு

வில்பத்து தேசிய பூங்காவைப் பார்வையிடச் சென்றபோது பெய்த பலத்த மழை காரணமாக நுழைவாயிலுக்குத் திரும்ப முடியாமல் தவித்த 30க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த வீதிகள் சேதமடைந்ததால், அந்தக் குழுவால் எலுவன்குளம் நுழைவாயிலுக்குத் திரும்ப முடியவில்லை. எனவே வனவிலங்கு அதிகாரிகள் பிரவேசித்து சஃபாரி வாகனங்களைப் பயன்படுத்தி அவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், கலா ஓயாவிலிருந்து பாயும் பாரியளவான நீர் காரணமாக, எலுவன்குளம் நுழைவாயிலைச் சுற்றியுள்ள பகுதி 6 அடிக்கும் அதிகமான நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் இந்தக் குழு திரும்ப முடியாத நிலையில் இருந்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



