பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25 வது நினைவுதினம்

உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஒரு பத்திரிகையாளரின் வீட்டிற்குள் புகுந்த கொலையாளிகளில் ஒருவன் அந்த பத்திரிகையாளனின் தந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து அழுத்த, இன்னொருவன் பத்திரிகையாளரின் அறையில் புகுந்து அவரை சுடுகின்றான்.
தனது எழுத்துக்களின் மீதே இரத்தவெள்ளத்தில் சரிந்து இந்த இனத்திற்காய் உயிர்தருகின்றான் அந்த பத்திரிகையாளன்.
வேறுபல பத்திரிகையாளர்களைப்போல வெளிநாட்டிற்கு தப்பியோ, அல்லது சிங்களத்தின் சில்லறையினைப்பெற்றுக்கொண்டே சுகபோகவாழ்விற்கான அனைத்துக்கதவுகளும் திறந்திருந்தும் இனத்தின் துயர்துடைக்க உழைத்த அவனிற்கு கிடைத்த பரசு கொடிய மரணம்.
கொலையளிகள் யார் என்பதும், இதன்பின்னால் யார், யார் இருந்தார்கள் என்பதும் சிறுகுழந்தைக்குக்கூட தெரியும்.
ஆனாலும் இப்படுகொலைக்கான நீதி இன்றுவரை கிடைக்கவில்லை. காலம் ஒருநாள் தன் கணக்கைத்தீர்க்கும் என்பதுமட்டும் உறுதி.
பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25 வது நினைவுதினம் இன்றாகும்.
(வீடியோ இங்கே )



