சீரற்ற வானிலை - பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

#SriLanka #weather #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
சீரற்ற வானிலை - பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக, இன்று (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

பொல்கொல்ல மகாவலி அணை பொறியாளர் அலுவலகம், பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 5,190 கன அடி நீர் கொள்ளளவு திறந்து விடப்படுவதாகக் கூறப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த இன்று 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கலா வெவாவின் 02 வான் கதவுகளும் தலா இரண்டு அடி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கலா வெவாவிலிருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 3,447 கன அடி நீர் கொள்ளளவு திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசன பொறியாளர் தெரிவித்தார்.

 இதேபோல், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் ஆறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் அங்கமுவ நீர்த்தேக்கத்திலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன,  

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!