சங்குப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி கோரிய போராட்டத்திற்கு தடை!

#SriLanka #Protest #Court Order
Mayoorikka
2 hours ago
சங்குப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட  பெண்ணிற்கு நீதி கோரிய போராட்டத்திற்கு தடை!

காரைநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ணின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இது தொடர்பில் ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தின் தடை உத்தரவு அறிக்கையில் குறிப்பப்பட்டுள்ளதாவது, வழக்கில் வழக்குத் தொடுநரால் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணத்தினையும் தாக்கல் செய்யப்பட்ட A அறிக்கை மற்றும் அணைக்கப்பட்ட கடிதத்தையும் ஆராய்ந்து பார்க்கின்றபோது, பூநகரி சங்குப்பிட்டி பாலத்தின் அருகே சடலமாக கரையொதுங்கிய பிரதீபா சுரேஸ்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் குற்றவாளிகள் அடையாளம் தண்டனை காணப்பட்டு உரிய வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அந்நாரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இவ்வாறான துன்பகரமான சம்பவங்கள் எமது நாட்டில் இடம்பெறுவதனைக் கண்டித்தும், காரைநகர் பிரதேசசபை முன்பாக அமைதியான வழியில் கண்டனப் பேரணி ஒன்று 19.10.2025 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசில நாட்களே ஆன நிலையில் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 இவ்வாறான சூழ்நிலையில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறுவது புலன்விசாரணைக்கு பாதகமாக அமையும் என்பதோடு அப்பிரதேசத்தில் தேவையற்ற அமைதியின்மையையும், இது தொடர்பில் பதற்றத்தையும் தோற்றுவிக்கும் என்பதனை அனுமானிக்கக்கூடியதாகவுள்ளது.

 எனவே புலன்விசாரணைகள் திருப்திகரமாக நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறான கண்டனப் பேரணி ஒன்று அவசியமற்ற ஒன்றாக கருதி, குறித்த கண்டன பேரணியை தடை செய்து கட்டளையாக்குதிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!