தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம்! ஜனாதிபதி

#SriLanka
Mayoorikka
2 hours ago
தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம்! ஜனாதிபதி

ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படை, அந்த தொழில்முறையை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஒரு படையினர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடெட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று சனிக்கிழமை (18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

 கடல் மார்க்கத்தில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிப்பதில் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். அனர்த்த காலங்களில் இலங்கை விமானப்படை ஆற்றிய பரந்தளவிளவிலான பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

images/content-image/1760798824.jpg

 'சுரகிமு லகபர' என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் நீல வானத்தைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் 03வது சமுத்திர படைப்பிரிவு, தாய்நாட்டைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொண்டுவரும் உயர்ந்த சேவை, செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டும் வகையில், ஜனாதிபதி வர்ண விருது வழங்கப்பட்டன.

 இலங்கை வான்வெளியைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் உறுப்பினர்களாக விமானப்படையில் இணைந்த 66வது, 67வது மற்றும் 68வது கெடெட் அதிகாரி பாடநெறியை பூர்த்தி செய்த அதிகாரிகளை விமானப் படை அதிகாரிகளாக நியமித்தல் மற்றும் 103வது இலக்க பறக்கும் கெடெட் அதிகாரி பாடநெறியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பறக்கும் அதிகாரி சின்னம் அணிவித்தல் என்பன முப்படைத்தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டது.

images/content-image/1760798855.jpg

 பாடநெறியில் அதிவிசேடமான திறமைகளை வெளிப்படுத்திய கெடெட் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விசேட விருதுகள் வழங்கப்பட்டன. பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று, 66 கெடெட் அதிகாரிகள் மிகவும் ஒழுக்கமான மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சிக்குப் பிறகு அதிகாரி பதவிக்கு பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த அதிகாரிகளின் வாழ்க்கையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். இலங்கை விமானப்படையில் இது மிகவும் அரிதான வாய்ப்பாகும்.

 எனவே, உங்கள் பெற்றோர் உங்களைப் பற்றி முதலில் பெருமைப்படுவார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளை ஒரு மரியாதைக்குரிய, தொழில்முறை பணியில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கனவும் உள்ளது. இன்று, உங்கள் பெற்றோரின் நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள். 

இலங்கைத் தாய்க்காக எங்கள் விமானப்படைக்கு மிகவும் துணிச்சலான, இளம், துடிப்பான குழுவை கொண்டு வருவதில் அவர்கள் செய்த பங்களிப்பிற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். 

 இன்று நீங்கள் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய மற்றும் மிகவும் தொழில்முறையுடன் கூடிய மற்றும் திறமையான இராணுவத்தில் இணைகிறீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் பொறுப்பு இந்த நற்பெயரையும் மரியாதையையும் தொடர்ந்து பாதுகாப்பது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு அதிகாரி செய்யும் எந்தவொரு தவறான செயலும் முழு விமானப்படையின் நற்பெயரையும் பாதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் இனி மேலும் ஒரு சாதாரண இளைஞன் அல்ல. 

images/content-image/1760798873.jpg

நீங்கள் ஒரு இராணுவத்தின் நற்பெயர், மரியாதை மற்றும் மதிப்பை உங்கள் தோள்களில் சுமந்த ஒரு அதிகாரி. அந்த இராணுவத்தின் மரியாதை மற்றும் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், நமது தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பொறுப்பு உங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. நமது தாய்நாட்டின் வான்வெளியின் பாதுகாப்பு உங்களைச் சார்ந்தது என்பதை நாங்கள் அறிவோம். இது ஒரு தனித்துவமான மற்றும் ஈடுசெய்ய முடியாத பொறுப்பாகும். 

நமது தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும், உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உயர்ந்த பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும் பிணைப்பும் எங்களுக்கு உள்ளது. மேலும், நமது கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறீர்கள்.

 இன்று நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்புகளில், நாடென்ற வகையில் நமது கடற்கரையின் எல்லைகளைக் கண்காணித்து அதன் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். 

 ஏனென்றால், நமது கடல் எல்லை ஊடாக குறிப்பாக சட்டவிரோத குடியேற்றவாசிகள், சட்டவிரோத பொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் அண்மைக்காலத்தில் ஆயுதங்கள் கூட நாட்டிற்குள் எடுத்துவரப்பட்டதை நாம் கண்டிருக்கிறோம். 

 எனவே, கடல் எல்லையைப் பாதுகாப்பது என்பது தாய்நாட்டின் மற்றும் தாய்நாட்டில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையாகும். அந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் நீங்கள் முறையாக நிறைவேற்றுவீர்கள் என்று எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. குறிப்பாக இன்று, போதைப்பொருள், அவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் அந்தக் குற்றங்களுடன் தொடர்புடைய அரசியல் மற்றும் அரச இயந்திரம் இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். அதன் ஆழத்தையும் அளவையும் நாம் அளவிட முடியும். 

இது வெறும் போதைப்பொருள் கடத்தல்களோ வெறும் குற்றச் செயல் மேற்கொள்ளும் கும்பல்களின் செயல்பாடுகளோ அல்ல. இது அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அரச இயந்திரத்தின் சில பகுதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதற்கு பங்களித்துள்ளன. அந்தப் பேரழிவு நமது கிராமங்களுக்கும் பரவி வருகிறது.

 எனவே, அந்தப் பேரழிவைத் தடுப்பதில் கடல்சார் கண்காணிப்பு மிகவும் முக்கியமானது. எனவே, அந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்தி, தாய்நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காகப் பணியாற்றும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் இடம்பெறும் திடீர் அனர்த்தங்களின் போது ஈடுசெய்ய முடியாத பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் எல்ல பகுதியில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உங்கள் தலையீட்டை முழு நாடும் அவதானித்தது என்பதை நான் அறிவேன். உங்கள் பணி ஒரு முக்கியமான பணி என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எனவே, திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் விமானம் மூலம் வழங்க வேண்டிய ஆதரவு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அதை நீங்கள் மிகவும் திறமையாகச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். மேலும், நமது நாட்டிற்குத் தேவையான விமானிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளை பயிற்றுவித்து தொடர்ந்து பேணும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று நீங்கள் நமது நாட்டின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாகவும்,பொறுப்புவாய்ந்தவர்களாகவும் முக்கியத்தும் பெறுகிறீர்கள். இன்று, இந்த நாட்டில் உள்ள அனைத்து தொழில்களுக்கும் தொழில்முறைமை அவசியம். 

இன்று, நம் நாட்டில் உள்ள பல தொழில்களின் தலைவிதி மிகவும் நம்பிக்கைக்குரியதாக இல்லை. அதன் பாதுகாப்பிற்காகவே தொழில்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அதன் பாதுகாப்பின்மைக்காக செயற்படுகிறது. அரச நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. பிரஜைகளின் வரிப் பணத்திலிருந்து அவர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

ஆனால் அவர்களில், மக்களுக்கு எதிராக இந்தத் தொழிலை பயன்படுத்தும் ஒரு சிலரும் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இன்று, நம் நாட்டின் அரச இயந்திரத்தில் தொழில்முறை குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 

ஆனால், நமது விமானப்படை அதன் தொழில்முறையை மிகவும் வலுவாகப் பாதுகாத்துள்ளது என்பதை பெருமையுடனும் பொறுப்புடனும் கூறலாம். எனவே, ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை மற்றும் திறமை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் கூடிய அரச சேவை எங்களுக்குத் தேவை. 

எனவே, உங்களிடம் மிகவும் தொழில்முறையான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நீங்கள் முறையாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உங்களிடம் மிக உயர்ந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்கள் சிரேஸ்ட அதிகாரிகள் உங்களைக் கண்காணிக்கிறார்கள். தொழில்முறை, மரியாதை மற்றும் புகழ் வழங்கப்பட்ட இந்த சேவையை நீங்கள் அதே வழியில் தொடருவீர்கள் என்று அவர்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த நாட்டின் பொதுமக்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பொறுப்பை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறார்கள். 

images/content-image/1760798905.jpg

இவை அனைத்தையும் போலவே, உங்களை நானும் ஜனாதிபதி என்ற வகையில் மிகுந்த நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் கண்காணிக்கிறேன். எங்கள் தாய்நாட்டையும் மக்களையும் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் பேரழிவிலிருந்து விடுவிக்க வேண்டும். அதில், ஒரு அரசியல் அதிகாரம் என்ற வகையில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நாங்கள் முறையாக நிறைவேற்றுவோம். விமானப்படை அதிகாரிகளாக உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நீங்கள் முறையாக நிறைவேற்றுவீர்கள் என்ற வலுவான நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. 

 எனவே, நீங்கள் பிரவேசித்துள்ள இந்த சந்தர்ப்பம் ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் தொழிற்துறை வாழ்க்கையிலும், உங்கள் எதிர்காலத்திலும் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும். இந்த பெறுமதியான வாய்ப்பை நீங்கள் தவறவிடாமல் உங்கள் எதிர்காலம், தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனுக்காக உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவீர்கள் என்ற வலுவான நம்பிக்கையுடன் உங்களை வாழ்த்துகிறேன்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

 பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, Marshal of the Air Force ரொஷான் குணதிலக்க, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய படைப்பிரிவுகள் , கெடெட் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!