இலஞ்சம் பெற்ற இரு அரச ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #corruption
Mayoorikka
2 hours ago
இலஞ்சம் பெற்ற இரு அரச  ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால்  கைது!

13,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச ஊழியர் (இயந்திர இயக்குபவர்) ஒருவர் மற்றும் பராமரிப்புத் தொழிலாளர் ஒருவர் (Maintenance worker) ஆகியோரை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) நேற்று (17) கைது செய்துள்ளது.

 பொத்துவில் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர் மற்றும் அக்கரைப்பற்று உதவிப் பொறியியலாளர் அலகு அலுவலகத்தைச் சேர்ந்த பராமரிப்புத் தொழிலாளி ஆகியோரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

 அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கொச்சிக்கச்சேனை பிரதேசத்தில் நீர் வழங்கும் கால்வாயைத் துப்பரவு செய்ய முறைப்பாட்டாளர் தலைமை வகிக்கும் விவசாயச் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட உழவு இயந்திரத்திற்கு (Scavator machine) தேவையான எரிபொருள் போதாது எனத் தெரிவித்து, மேலதிகமாக 51 லீற்றர் டீசல் செலவாகும் எனக் கூறி சந்தேக நபர்கள் இந்த இலஞ்சப் பணத்தை கோரியுள்ளனர்.

 இதன்படி, 13,200 ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்றமை மற்றும் அதற்குத் துணை போனமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!