இலங்கையில் ஒரேநாளில் குறைந்த தங்கத்தின் விலை!
#SriLanka
#Lanka4
Mayoorikka
2 hours ago

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (18) காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் '22 கரட்' ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,800 ரூபாவாக குறைந்துள்ளது.
நேற்று இதன் விலை 379,200 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை, நேற்று (17) 410,000 ரூபாவாக இருந்த '24 கரட்' ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 390,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை



