இலங்கை தற்போதை சீர்த்திருத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் - IMF வலியுறுத்தல்!

இலங்கை கடந்து வந்த கடினமான காலம் முடிந்துவிட்டதால், எதிர்கால நன்மைகளைப் பெற தற்போதைய சீர்திருத்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களுடன் இணைந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ.எம்.எஃப் பிரதிநிதிகள் இந்தனை தெரிவித்துள்ளனர்.
நிகழ்வில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான துணை இயக்குநர் தாமஸ் ஹெல்ப்ளின், "நாம் திரும்பிப் பார்த்தால், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை IMF திட்டத்தை செயல்படுத்தியது. அது இப்போது மிகவும் வலுவான வளர்ச்சியால் பயனடைந்துள்ளது.
கடந்த ஆண்டு, அது 5% வளர்ந்தது. இந்த ஆண்டு இது 4.2% ஆக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இது 3% ஆக மாறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
இந்த நேரத்தில் வழங்கக்கூடிய முக்கிய ஆலோசனை என்னவென்றால், அதிக நன்மைகளை அடைய இந்த திட்டத்தைத் தொடர்வது முக்கியம். பின்னர் வளர்ச்சி வரும். அது தொடரும்.
இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு எது முக்கியம் என்பதைப் பற்றி நாம் பேசினால், பட்ஜெட்டில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதில் நிதி ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அரசு நிறுவனங்களின் நம்பகத்தன்மைக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த நன்மைகளின் நீண்டகால உயிர்வாழ்வுக்கு இது மிகவும் முக்கியமானது” என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



