இலங்கையின் சுகாதார துறையை மேம்படுத்த 100 மில்லியன் டொலர் கடனுதவி!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 100 மில்லியன் டொலர் கடனுக்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது.
நிதியமைச்சின் தகவல்களுக்கமைய இந்தக் கடனுக்கான ஒப்பந்தத்தில், இலங்கை சார்பில் நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் அதன் இலங்கைக்கான பணிப்பாளர் தகஃபுமி கடோனோவும் கையெழுத்திட்டுள்ளனர்.
இக்கடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண மூலதன வளங்கள் திட்டத்தின் ஊடாக வழங்கப்படுகிறது. இக்கடனுதவி, சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய மூலோபாயக் கட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதுடன், இது இரண்டாம் நிலைச் சுகாதார சேவைகளின் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முதல் பரிந்துரைச் சிகிச்சையாக செயல்படும்.
மேலும், இந்த நிதியுதவித் தொகுப்பில், தொற்றுநோய் நிதியத்தின் கீழ் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட கடன்களின் அடிப்படையில் வழங்கப்படும் 6.9 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிப்புற நிதியளிக்கப்பட்ட மானியமும் உள்ளடங்குவதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



