செவ்வந்தியை காதலித்தாரா நாமல்? வெளியான தகவல்

#SriLanka #Namal Rajapaksha #Lanka4
Mayoorikka
2 months ago
செவ்வந்தியை காதலித்தாரா நாமல்? வெளியான தகவல்

தான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, மாறாக லிமினி என்பவரை தான் என்றும், தமக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் இஷாரா செவ்வந்தி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 

 மேலும், பாதாள உலகம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்த அவர் பாதாள உலகில் தொடர்புடையவர்களை காவல்துறை விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அது காவல்துறையின் பொறுப்பு. ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் காவல்துறை கவனிக்க வேண்டும். 

 ஒரு குழு திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார். ஒரு செயலாளர் திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார். 

 அப்படியானால் இந்த செயலாளர் யார்? இந்த தகவலை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு கொடுத்தது யார்? இதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது. 

 வெளியேறிய மக்களில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். எனவே, காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், 323 கொள்கலன் தப்பியது போலவே பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது. அரசாங்கத்தில் சிலர் "நீதிமன்ற உத்தரவுகளை ஏன் ஏற்க வேண்டும்?" என்று சொல்லும் நிலையை அடைந்துவிட்டனர். 

இதிலிருந்து அமைப்பு மாற்றம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!