எக்னெலிகொட, லசந்த கடத்தலுடன் கோட்டாவுக்கு தொடர்பு! பகிரங்கப்படுத்திய பொன்சேகா

#SriLanka #Gotabaya Rajapaksa #Sarath Fonseka #Lanka4
Mayoorikka
3 hours ago
எக்னெலிகொட, லசந்த  கடத்தலுடன் கோட்டாவுக்கு தொடர்பு!  பகிரங்கப்படுத்திய பொன்சேகா

பிரகீத் எக்னெலிகொட மற்றும் லசந்த விக்ரமதுங்க கடத்தலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்குத் தொடர்பு உள்ளதாக இராணுவக் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா வெளிப்படுத்தினார்.

 உள்நாட்டு யுத்தத்தின்போது அப்போதைய கோட்டாபய ராஜபக்ஸவின் கீழ் இயங்கிய உத்தியோகபூர்வமற்ற ஒரு குழுவே தெற்கில் இடம்பெற்ற பிரகீத் எக்னலிகொட மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கடத்தல்களை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

 சுரேஸ் சலே, கபில கெந்த விதாரண உள்ளிட்ட அப்போது ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரிகள் குறித்த உத்தியோகபூர்வமற்ற குழுவில் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது வடக்கு, கிழக்கு பகுதிகளின் பாதுகாப்பு தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாகவும், தெற்கின் பாதுகாப்பானது கோட்டாபயவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் சரத் பொன்சேகா கூறினார்.

 கொழும்பு உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை சாவடிகள் எதுவும் மறைமுகமாக மேற்கொள்ளப்படவில்லை. எங்களுடைய அமைப்பில் அப்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த புலனாய்வு அதிகாரிகள் எவரும் இந்தக் கடத்தல்களில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

 தெற்கின் புலனாய்வு நடவடிக்கைகள் தனியாக கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்றன. கோட்டாபயவிற்கு தனிப்பட்ட ரீதியில் செயற்பட்ட ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரிகளே இந்தக் கடத்தல்களுக்கு உடந்தையாக இருந்தனர். 

இந்த விடயங்கள் தொடர்பில் கோட்டாபய என்னிடம் எதுவும் தெரிவித்ததில்லை எனத் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!