இலங்கை வரலாற்றில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிப்பு!
#SriLanka
#prices
#Gold
Mayoorikka
22 hours ago

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (17) 13 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாக காணப்படுகிறது.
நேற்றைய தினம் (16) 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 65 ஆயிரத்து 400 ரூபாயாகவும் காணப்பட்டது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



