இஷாரா செவ்வந்திக்கு இப்படியொரு மனதா? வாக்குமூலத்தில் வெளியிட்ட தகவல்!

#SriLanka #Arrest
Mayoorikka
4 hours ago
இஷாரா செவ்வந்திக்கு இப்படியொரு மனதா? வாக்குமூலத்தில் வெளியிட்ட  தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட முன், நிதி வசதியில்லாத பெண் ஒருவருக்கு பண உதவி செய்ததாகவும், சஞ்சீவ கொலையின் போது நீதிமன்றத்திற்கு சென்ற தன்னை, உண்மையான வழக்கறிஞர் என எண்ணிய பெண் தன்னை வழக்கு ஒன்றை வாதாட அழைத்ததாக இஷாரா தெரிவித்துள்ளார்.

 “கணேமுல்ல சஞ்சீவவை சுட கமாண்டோ சலிந்துவுடன் நீதிமன்றத்திற்கு வந்தபோது, ​​வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் இருந்தேன். அங்கு வந்த மிகவும் உதவியற்ற தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் பேசினார். 

நான் ஒரு வழக்கறிஞர் என்று அவர் நினைத்தார். அந்தப் பெண்ணின் கணவர் அவரை மோசமாக அடிப்பதாகவும் வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். தன்னிடம் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது. 

அந்தத் தொகைக்கு வழக்கில் வாதாட முடியுமா எனவும் குறித்த பெண் தன்னிடம் கேட்டதாக செவ்வந்தி தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் வேறொரு வழக்கிறக்காக வாதாடவுள்ளதாக கூறினேன். 

அதனால் நான் அந்த பெண்ணின் வழக்கை அங்கிருந்த மற்றுமொரு பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, என் பார்வையில் இருந்த மற்றொரு பெண் வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றேன். அந்தப் பெண் வழக்கறிஞரிடம் சென்று தனது கதையைச் சொன்னார். 

வழக்கில் முன்னிலையாக 2000 ரூபாய் கேட்டார். அந்த பெண் மிகவும் உதவியற்றவராக என்னைப் பார்த்தார். நான் அவரை அறையிலிருந்து வெளியே அழைத்து, என்னிடம் இருந்த 5000 ரூபாயை கொடுத்து, அந்தப் பெண் சட்டத்தரணியை வழக்கில் வாதாட அழைக்குமாறு கோரினேன். 

அந்த பெண் என் கைகளைப் பிடித்து, வணங்கி பணத்தை பெற்றுக் கொண்டார்” என இஷாரா குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!