நேபாளத்திலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி!
#SriLanka
#Arrest
#Lanka4
#Nepal
Mayoorikka
3 hours ago

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு இலங்கையர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் நேபாளத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
( update )
இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோர் குற்ற விசாரணைப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முக அடையாளக் கட்டமைப்பின் ஊடாக பரிசோதிக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் அடையாளம் உறுதியானது என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



