முகமாலை பகுதியில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!
#SriLanka
#Kilinochchi
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் காணி ஒன்றில் இருந்து 40 மோட்டார் குண்டுகள் நேற்று (14.10) கண்டுபிடிக்கப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலத்தை சாகுபடிக்கு தயார் செய்யும் போது காணி உரிமையாளர் குண்டுகளை கவனித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழப்பு பிரிவு குறித்த இடத்தை ஆய்வு செய்தபோது, குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்க செய்யப்படவுள்ளன.
சம்பவம் குறித்து பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



