போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க அவசர நடவடிக்கை!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழித்து, போதைக்கு அடிமையானவர்களைப் பரந்த மக்கள் பங்கேற்புடன் புனர்வாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்ட “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” (Ratama Ekata – National Operation) எனும் அவசர துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தேசிய செயற்பாட்டுக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை பரவுவது நாட்டில் ஒரு தீவிரமான தேசிய பிரச்சினையாக மாறியுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சவாலை வலுவான அரசியல் தலைமைத்துவம், செயல்திறன் மிக்க முடிவெடுக்கும் பொறிமுறை மற்றும் சுறுசுறுப்பான சமூக ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் தேசிய மட்டத்தில் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தேசிய இலக்கை அடைவதற்காகவே “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதன் கீழ், பரந்த தகவல் பிரசாரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முடக்குதல். போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளை பலப்படுத்துதல்.
அடிமைத்தனத்திலிருந்து மீள விரும்பும் தனிநபர்களுக்கு ஆதரவளித்தல்.
பரந்துபட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த தேசிய நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



