மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் போராட்டங்கள் வெடிக்கும்! சஜித் எச்சரிக்கை

#SriLanka #Sajith Premadasa #Electricity Bill #Lanka4
Mayoorikka
2 days ago
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் போராட்டங்கள் வெடிக்கும்! சஜித் எச்சரிக்கை

நாட்டில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமானால் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் டி.எஸ். சேனநாயக்க அரசியல் கற்கைகள் பீடத்தின் திறப்பு விழா, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் இன்று (11) இடம்பெற்றது.

 இதன்போது கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க தயாராகி வருகின்றது. மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதே அந்த நற்செய்தியாகும்.

 இந்த மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படக் கூடாது என்றே நாம் பிரார்த்திக்கிறோம். அரசாங்கம் ஏதோ ஒருவகையில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால், ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம், மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்.

 இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி நடவடிக்கை எடுப்போம். மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுப் பொருளாதாரத்தில் தாய்மார்களும் பெண்களும் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக காணப்படுகின்றனர்.

 துன்பம், பசி, அடக்குமுறை மற்றும் அசௌகரியத்தால் மக்களை நசுக்கி, என்றுமே மக்களை அநாதவரவான நிலையில் வைத்துக் கொள்வதற்கு எடுக்கும் அரசாங்கத்தின் இந்த மோசமான கொள்கைகளை தோற்கடிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 220 இலட்சம் மக்களினது உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!