இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல்!

#SriLanka #Hotel #Lanka4
Mayoorikka
1 month ago
இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல்!

இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல் திட்டம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்தின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

 இங்கு இடம்பெற்ற தொடக்க விழாவில் இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா மற்றும் இந்த திட்டத்தை உருவாக்கிய மேம்பாட்டாளரான ABEC பிரீமியர் பிரதிநிதி திலிப் கே. ஹெராத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இதன் போது உரையாற்றிய அமைச்சர் விஜித ஹெராத்து கூறுகையில், இந்த திட்டம் இலங்கைக்கு ஒரு முக்கிய முதலீட்டு மைல்கல்லாகும். இது சுற்றுலா துறையில் வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும்.

 செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். 

அதற்கான முதல் முயற்சியே இது என்றார். இந்த நிகழ்வில் ABEC குழுமத்தின் 20வது ஆண்டு நிறைவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

 அதில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள், இராஜதந்திரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை