முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதி கைது!

#SriLanka #Arrest #drugs #Mullaitivu #Lanka4
Mayoorikka
2 days ago
முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதி கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 மேலும் குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனையின் போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 அவர்களை விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!