கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி - மில்லியன் கணக்கான பணத்தை இழந்த மக்கள்!

#SriLanka #Canada #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 weeks ago
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி - மில்லியன் கணக்கான பணத்தை இழந்த மக்கள்!

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (10.10) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

சிங்கராஜே ஜனக சில்வா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கனடாவின் நிரந்தர வதிவிடக் குடியுரிமையையும் பெற்றுள்ளார். சந்தேக நபர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ளார். 

 மேலும் அவரது மோசடிக்கு இலக்கான பத்து பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

 அதன்படி, பணியகம் நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவித்ததுடன், இந்த சந்தேக நபருக்கு பயணத் தடை விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

 இதேவேளை மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் குறித்து தகவல் இருந்தால், பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட காவல் பிரிவின் 0112 882 228 என்ற எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!