அமைச்சர் ஒருவர் மீது அவதூறு: சிக்கப் போகும் 10 பேஸ்புக் கணக்குகள்
#SriLanka
#Facebook
#Lanka4
Mayoorikka
2 weeks ago
அமைச்சர் வசந்த சமரசிங்க மீது போலி மற்றும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறப்படும் 10 பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த பத்து பேஸ்புக் கணக்கின் பயனர்களும் கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரின் குடும்பம் மற்றும் தொழில்முறை நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், போலி கருத்துக்கள், திருத்தப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், அமைச்சர் வசந்த சமரசிங்கவையும் அவரின் மக்கள் தொடர் அதிகாரியான நிமோடி விக்கிமசிங்க ஆகியோரை குறிவைத்து இந்த பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
