இன்று உலக சிறுவர்கள், முதியோர் தினம்!

இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (அக்டோபர் 1) கொண்டாடப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தை பொறுத்தமட்டில் இரு தரப்பினரும் பல்வேறு துஷ்பிரயோகங்களை உடலாலும் உள்ளத்தாலும் அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலை மாறவேண்டும் சிறுவர் மற்றும் முதியோருக்கு பாதுகாப்பான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது அனைவரினதும் கடமையாகும். இளமை காலம் பாதிக்கப்படும் போது எதிர்காலம் கேள்விக்குறியாகும். இளமைக்கால துன்பவியல் சம்பவங்கள் பெரும்பாலான குழந்தைகளை வன்முறையாளர்களாக மாற்றுகின்றன.
அத்துடன் வாழ்க்கையில் பல அர்பணிப்புகளையும் பல சவால்களையும் சந்தித்த முதியோர்களால் இறுதி காலத்தில் அன்பையும் அரவணைப்பையும் எதிர்நோக்கியே வாழ்கின்றார்கள் எனவே அவர்களும் கவனிப்பிற்குரியவர்களே.
அவர்களது இன்பகரமான வாழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.கொண்டாட்டமாக மற்றும் ஆண்டாண்டு காலத்திற்கு நடைமுறைப்படுத்தாமல் அதன் அர்த்தத்தை செயற்பாடுகளால் நிலை நிறுத்துவோம்.. பிள்ளைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது பெற்றோர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் கடமையாகும் உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளாரவர்களில் சிறுவர்களும், முதியவர்களும் உள்ளடங்குகின்றனர்.
எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களினதும், முதியவர்களினதும் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் இந்த தினத்தினை கொண்டாடுகின்றனர்.
நாம் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் செலவிடும் நேரத்தினை குறைத்து – சிறிய நேரத்தையாவது ஒதுக்கி முதியவர்களுடன் உறவாடுவதில் செலவிடுவோமாக இருந்தால் அவை அவர்களுக்கு ஆறுதலாக இருப்பதுடன் மாத்திரம் அல்லாது, அவை எமது எதிர்கால வாழ்க்கைக்கு உதவியாகவும் அமையும்.
காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்” என்ற பழமொழியைப்போல நாம் எம்முடைய வீட்டில் வசதிக்கும் முதியோரை எவ்வாறு நடத்துகின்றோமோ, அதனை பார்த்து பின்பற்றி எம்முடைய பிள்ளைகளும் எம்மை நடாத்துவார்கள் என்பதை மனதில் இருந்தி செயற்படுவோம்.
முதியோர்களும் தமது காலத்தில் குழந்தைகள் சிறுவர்கள் போல் உள்ளதாலோ என்னவோ இந்த இரு தினங்களும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துக்கள்….
(வீடியோ இங்கே )
அனுசரணை



