வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளராகவுள்ள சிவாஜிலிங்கம்!
#SriLanka
#Jaffna
#M K Sivajilingam
#Lanka4
Mayoorikka
2 months ago
தமிழின விடுதலைக்காக அன்றும், இன்றும் ஓயாது குரல் கொடுத்து வரும் மூத்த தமிழ் அரசியல் வாதி, தன்மானத் தமிழன் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் விரைவில் வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக வருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியப் பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் அப்புலிங்கம் உதயசூரியன் தனது உறுப்பினர் பதவியிலிருந்து தானாக முன்வந்து ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) விலகியுள்ளார்.
இதன்மூலம் சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய உறுப்பினராகுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவர் மேற்படி சபையின் புதிய தவிசாளராக விரைவில் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
