வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? செப்டம்பர் 28 (September 28)

#people #history #Lanka4 #World
Prasu
1 month ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? செப்டம்பர் 28 (September 28)

செப்டம்பர் 28 (September 28) கிரிகோரியன் ஆண்டின் 271 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 272 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 94 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்


  • கிமு 48 – எகிப்திய மன்னன் பதின்மூன்றாம் தொலெமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான்.
  • 235 – போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார்.
  • 935 – பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம் இங்கிலாந்தில் தரையிறங்கினான்.
  • 1238 – அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான்.
  • 1322 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் லூயிசு ஆஸ்திரியாவின் முதலாம் பிரெடெரிக்கை மூல்டோர்ஃப் சமரில் வென்றார்.
  • 1781 – அமெரிக்கப் புரட்சி: அமெரிக்கப் படைகள் பிரெஞ்சுக் கடற்படைகளின் உதவியுடன் வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரை முற்றுகையிட்டன.
  • 1795 – யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.[1]
  • 1844 – முதலாம் ஒஸ்கார் சுவீடன் மன்னராக முடிசூடினார்.
  • 1867 – டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
  • 1868 – சல்கொலேயா போரை அடுத்து எசுப்பானியாவின் அரசி இரன்டாம் இசபெல்லா பிரான்சுக்குத் தப்பி ஓடினார்.
  • 1871 – அடிமைகளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் தீர்மானத்தை பிரேசில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
  • 1889 – நிறை மற்றும் அளவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.
  • 1895 – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டது.
  • 1901 – பிலிப்பீனியத் தீவிரவாதிகள் கிழக்கு சமார் பகுதியில் நடத்திய தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
  • 1919 – அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் ஒமாகா நகரில் கறுப்பினத்தவருக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரங்களில் மூவர் இறந்தனர்.
  • 1928 – அலெக்சாண்டர் பிளெமிங் தனது ஆய்வுகூடத்தில் பாக்டீரியாக் கொல்லி ஒன்று வளருவதை அவதானித்தார். இது பின்னர் பெனிசிலின் எனப் பெயர் பெற்றது.
  • 1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.
  • 1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சாவா செருமனியிடம் வீழ்ந்தது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாட்சிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.
  • 1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.
  • 1951 – சிபிஎசு நிறுவனம் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொது மக்களுக்கு விற்பனைக்கு விட்டது. ஆனாலும், ஒரு மாதத்தினுள் இப்பெட்டிகள் விற்பனையில் இருந்து எடுக்கப்பட்டன.
  • 1960 – மாலி, செனிகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
  • 1961 – டமாசுகசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா இணைந்த ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது
  • 1970 – எகிப்தியத் தலைவர் ஜமால் அப்துல் நாசிர் மாரடைப்பினால் காலமானார்.
  • 1992 – பாக்கித்தானின் பன்னாட்டு விமானம் ஒன்று நேப்பாளத்தில் மலையில் மோதியதை அடுத்து, அதில் பயணம் செய்த அனைத்து 167 பேரும் உயிரிழந்தனர்.
  • 1993 – யாழ்ப்பாணத்தில் கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட "யாழ்தேவி இராணுவ நடவடிக்கை" விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
  • 1994 – பால்ட்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்தோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்.
  • 1995 – இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீன், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத் காசாக் கரை தொடர்பான இடைக்கால உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
  • 1995 – பாப் டெனார்டு என்ற பிரெஞ்சு போர் வீரன் தனது கூலிப் படைகளுடன் சேர்ந்து கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினான்.
  • 2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.
  • 2009 – கினியின் இராணுவ அரசு ஆர்ப்பாடக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 1400 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.
  • 2018 – இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுகளில் இடம்பெற்ற 7.5 Mw அளவு நிலநடுக்கம் பெரும் ஆழிப்பேரலையை ஏற்படுத்தியதில் 4,340 பேர் உயிரிழந்தனர், 10,679 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்


  • கிமு 551 – கன்பூசியஸ், சீன மெய்யியலாளர் (இ. கிமு 479)
  • 1852 – ஆன்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1907)
  • 1852 – இசிசு போகுசன், பிரித்தானிய வானியலாளர் (இ. 1945)
  • 1907 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், புரட்சியாளர் (இ. 1931)
  • 1918 – வசீலி சுகோம்லின்சுக்கி, உக்ரைனியக் கல்வியாளர் (இ. 1970)
  • 1920 – வீ.கே, ஈழத்து ஓவியர், எழுத்தாளர்
  • 1929 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி (இ. 2022)
  • 1932 – விக்டர் அரா, சிலி நாட்டுப் பாடகர், இயக்குநர் (இ. 1973)
  • 1934 – பிரிஜிட் பார்டோ, பிரான்சிய நடிகை
  • 1947 – துரை. மனோகரன், ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர்
  • 1947 – சேக் அசீனா, வங்காளதேசத்தின் 10வது பிரதமர்
  • 1955 – ஸ்ரொபோன் டியோன், கனடிய அரசியல்வாதி
  • 1966 – பூரி ஜெகன்நாத், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
  • 1968 – நவோமி வாட்ஸ், ஆங்கிலேய-ஆத்திரேலிய நடிகை
  • 1974 – சசிகுமார், தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்
  • 1975 – இசுட்டீவ் கிளார்க், ஆத்திரேலியத் துடுப்பாளர்
  • 1982 – ரன்பீர் கபூர், இந்திய நடிகர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!