பெருந்துயரமாக மாறிய விஜயின் பிரச்சார கூட்டம்! 40ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! மேலும் அதிகரிக்கும் என அச்சம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் கரூரில் மக்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசலில் 40 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு வழங்கி உள்ளார். நாமக்கல் மற்றும் சேலம் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வர உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேவையான அளவு மருத்துவர்கள், உபகரணங்கள் உள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் இடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக உயிர் சேதம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என தீவிரமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சழுந்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



