திலீபனுக்கு தலைநகர் கொழும்பில் அஞ்சலிசெலுத்தினார் - ரவிகரன் எம்.பி
தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் தமிழர்தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர்தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டு.
வருகின்றன. இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இலங்கைத் தலைநகர் கொழும்பில் தியாகதீபம் திலீபனுக்கு 26.09.2025 இன்று இறுதிநாள் அஞ்சலிகளை செலுத்தினார்.
குறிப்பாக தற்போது செப்டெம்பர் மாதத்திற்கான இரண்டாவது மாதாந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்றுவருகின்றன. ஆகவே குறித்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இலங்கைத் தலைநகர் கொழும்பில் தங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே அவரால் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் தியாகதீபம் திலீபனின் திருஉருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டு, மலர்தூவப்பட்டு உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
