கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நிதியறிவுக்கண்காட்சி

#SriLanka #Kilinochchi #Central Bank #Exhibition
Prasu
1 month ago
கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நிதியறிவுக்கண்காட்சி

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் அறிவு மாதத்தை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிதியறிவுக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன்,மத்திய வங்கியின் பிராந்திய அபிவிருத்திக்கான பணிப்பாளர் CHATURA ARIYADASA உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறித்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி கல்வியறிவை மேம்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இக் கண்காட்சியில் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் (MSMEs) காட்சிக் கூடங்கள், கொழும்பு பங்கு பரிவர்த்தனை (CSE) முதலீட்டு வழிகாட்டுதல்கள், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய (ETF) சேவைகள், கொடுகடன் தகவல் பணியக சேவைகள் (CRIB) மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் என்பன இடம்பெறகின்றன.

மேலும், பார்வையாளர்களுக்கு இலங்கை நாணயங்களின் வரலாறு, அரிய மற்றும் நினைவு நாணயங்கள். நாணய அமைப்பின் வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கிய நாணய அரும்பொருட்காட்சியகமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது தனிநபர் நிதியியல் முகாமைத்துவம், வங்கிச் சேவைகள், டிஜிட்டல் வங்கி சேவைகள், நிதியியல் மோசடிகள் மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் போன்றவை குறித்து பொதுமக்கள் பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான நிதிக் கல்வியறிவு மற்றும் அவற்றின் பிரயோகம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.பிற்பகல் 5.00மணி வரை நடைபெறவுள்ளது.

------------------------------------------------------------------------------------

A financial literacy exhibition has been inaugurated by the Kilinochchi Regional Office of the Central Bank of Sri Lanka in celebration of the Central Bank of Sri Lanka’s Financial Literacy Month.

The event was chaired by the Kilinochchi Regional Manager of the Central Bank and was graced by the Governor of the Northern Province, Nagalingam Vedhanayakan.

The event was inaugurated by the District Government Secretary S. Muralitharan, the Director of Regional Development of the Central Bank, CHATURA ARIYADASA and others.

As part of the continuous efforts of the Central Bank of Sri Lanka to promote financial literacy among students and the general public, the Kilinochchi Regional Office of the Central Bank has organized this.

The exhibition features booths for licensed banks and Micro, Small and Medium Enterprises (MSMEs), Colombo Stock Exchange (CSE) investment guides, Employees Provident Fund (EPF) and Employees Trust Fund (ETF) services, Credit Information Bureau (CRIB) services and vocational training guides.

In addition, visitors will be treated to a numismatic exhibition that includes the history of Sri Lankan coins, rare and commemorative coins, and the development of the monetary system.

The event is designed to provide the public with useful information on personal financial management, banking services, digital banking services, financial frauds and vocational training guides, covering the necessary topics related to financial literacy and their application. It will be held until 5.00 pm.

------------------------------------------------------------------------------------

ශ්‍රී ලංකා මහ බැංකුවේ මූල්‍ය සාක්ෂරතා මාසය සැමරීම සඳහා ශ්‍රී ලංකා මහ බැංකුවේ කිලිනොච්චි ප්‍රාදේශීය කාර්යාලය විසින් මූල්‍ය සාක්ෂරතා ප්‍රදර්ශනයක් ආරම්භ කර ඇත.

මෙම උත්සවයේ ප්‍රධානත්වය මහ බැංකුවේ කිලිනොච්චි ප්‍රාදේශීය කළමනාකරු විසින් දරන ලද අතර උතුරු පළාත් ආණ්ඩුකාර නාගලිංගම් වේදනායකන් විසින් දරන ලදී.

මෙම උත්සවය දිස්ත්‍රික් රජයේ ලේකම් එස්. මුරලිදරන්, මහ බැංකුවේ ප්‍රාදේශීය සංවර්ධන අධ්‍යක්ෂ චතුර ආරියදාස සහ තවත් අය විසින් ආරම්භ කරන ලදී.

සිසුන් සහ මහජනතාව අතර මූල්‍ය සාක්ෂරතාවය ප්‍රවර්ධනය කිරීම සඳහා ශ්‍රී ලංකා මහ බැංකුවේ අඛණ්ඩ උත්සාහයේ කොටසක් ලෙස, මහ බැංකුවේ කිලිනොච්චි ප්‍රාදේශීය කාර්යාලය මෙය සංවිධානය කර ඇත.

මෙම ප්‍රදර්ශනයේ බලපත්‍රලාභී බැංකු සහ ක්ෂුද්‍ර, කුඩා හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසායන් (MSME), කොළඹ කොටස් හුවමාරුව (CSE) ආයෝජන මාර්ගෝපදේශ, සේවක අර්ථසාධක අරමුදල් (EPF) සහ සේවක භාර අරමුදල් (ETF) සේවා, ණය තොරතුරු කාර්යාංශය (CRIB) සේවා සහ වෘත්තීය පුහුණු මාර්ගෝපදේශ සඳහා කුටි ඇතුළත් වේ.

මීට අමතරව, ශ්‍රී ලංකා කාසිවල ඉතිහාසය, දුර්ලභ හා සමරු කාසි සහ මුදල් පද්ධතියේ සංවර්ධනය ඇතුළත් සංඛ්‍යාත්මක ප්‍රදර්ශනයක් නරඹන්නන්ට ලැබෙනු ඇත.

මූල්‍ය සාක්ෂරතාවය සහ ඒවායේ යෙදුමට අදාළ අවශ්‍ය මාතෘකා ආවරණය වන පරිදි පුද්ගලික මූල්‍ය කළමනාකරණය, බැංකු සේවා, ඩිජිටල් බැංකු සේවා, මූල්‍ය වංචා සහ වෘත්තීය පුහුණු මාර්ගෝපදේශ පිළිබඳ ප්‍රයෝජනවත් තොරතුරු මහජනතාවට ලබා දීම සඳහා මෙම උත්සවය සැලසුම් කර ඇත. එය සවස 5.00 දක්වා පැවැත්වේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!