அரச ஊழியர்கள் - 10வருட சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்தவர்கள் மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வூதியத்தைப் பெறலாம்!
பின்வரும் மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
* பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுதல்.
* தீவிர புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு இருத்தல்.
* கண்களில் கண்பார்வைத்திறன் 60% மேல் குறைவடைதல்.
* கேட்கும் திறன் 90% மேல் குறைவடைதல்.
* உடல் ஊனமுற்று சக்கர நாற்காலியில் இருத்தல்.
* திடீரென பேச்சுத் திறன் பறிபோதல் மேற்படி நோய் நிலைமை காரணமாக ஓய்வு பெற விரும்பும் அரச ஊழியர்கள் நோய்கான மருத்துவச் சிகிச்சை/மருத்துவ அறிக்கையை அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மாகாண/தேசிய மருத்துவசபை மூலம் பரிசீலனை செய்து குறித்த ஊழியருக்கான ஓய்வூதியத்தைப் பெற அனுமதி கிடைக்கும். சேவைக் காலத்திற்கு அமைய,அடிப்படைச் சம்பளத்தில் இருந்து கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கணிக்கும் விதங்கள்.
* 10 வருட சேவைக் காலத்திற்கு அடிப்படைச் சம்பளத்தில் 55% ஓய்வூதியம் கிடைக்கும்.
* 10 - 19 வருடச் சேவைக் காலத்தில் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு சதவீதமும், 20-30 வருடச் சேவைக் காலத்தில் ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு சதவீதமும் அடிப்படைச் சம்பளத்தில் ஓய்வூதியம் அதிகரிக்கும்.
* 30 வருடச் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்தால் அடிப்படைச் சம்பளத்தில் 85% ஓய்வூதியம் கிடைக்கும்.
* 30 வருடத்தின் பின் எத்தனை வருடங்கள் சேவையில் இருந்தாலும் அடிப்படைச் சம்பளத்தில் 85% மட்டுமே கிடைக்கும்.ஆனால் சம்பள உயர்வு மூலம் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கும்.
