கனடாவில் 6 வயது குழந்தையை கடத்த முயன்ற 27 வயது நபர் கைது

#Arrest #Canada #children #Kidnap
Prasu
3 weeks ago
கனடாவில் 6 வயது குழந்தையை கடத்த முயன்ற 27 வயது நபர் கைது

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள நியூ லிஸ்கார்ட் பகுதியில் ஆறு வயதான குழந்தையை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 27 வயதான ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக ஒருவர், குழந்தை கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நகர மையத்தில் உள்ள ஒரு இல்லத்தில் இருந்து குழந்தை காணாமல் போனதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

விசாரணையில், குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் அந்த இல்லத்தில் உள்ள குழந்தையுடன் தொடர்பு கொண்டு, பின்னர் அந்தக் குழந்தை அவருடன் அருகிலுள்ள பூங்காவிற்கு சென்றது தெரியவந்துள்ளது.

இதனை அவதானித்த ஒரு பொதுமகன் குழந்தையை கண்டுபிடித்து பாதிப்பின்றி குடும்பத்திடம் ஒப்படைத்தார். அதே நேரத்தில், சந்தேகநபர் பூங்கா அருகே கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிறகு, அவர் ஒரு பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதில், அந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரிக்கு உயிர் ஆபத்தில்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!