மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
#SriLanka
#Accident
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
2 months ago
வென்னப்புவ பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மோட்டார் சைக்கிளின் கிக் பெடல் சரியாக வேலை செய்யாததால், அவர் வாகனத்தைத் தள்ளி இயக்க முயன்றுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, அவர் வீதியில் தூக்கி வீசப்பட்ட்டுள்ளார்.

அப்போது, வீதியில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வென்னப்புவ தும்மலதெனிய பகுதியில் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
