ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்யத் திட்டம் - அஜித் தர்மபால

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்வத்கான திட்டம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸார்ரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அல்லது பாதுகாப்பு பிரிவின் உறுப்பினராக மாறுவேடமிட்ட ஒரு கொலையாளி மூலம் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தகவல் மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டதாகவும், அதைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



