கனடாவில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்

#Police #Canada #Murder #GunShoot
Prasu
2 hours ago
கனடாவில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்

கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் க்யூபெக் மாகாணம், லோங்குவெயில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது நூரான் ரெசாய் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனின் தந்தை ஷரிப் ரெசாய், மகன் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறி, “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“என் மகன் எப்போதும் சிரித்துப் பிறரைக் கவர்ந்த பையன். அவர் குழந்தை மட்டுமே. இந்தக் கொலை நியாயமல்ல” என தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 5 விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மான்ட்ரியால் பொலிஸாரின் உதவியுடன் சம்பவத்தை விசாரணை செய்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!