பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபன் 38ஆவது நினைவேந்தல்!!

தியாக தீபம் திலீபன் அவர்களது 38 வது நினைவேந்தல் பருத்தித்துறை தியாகி திலீபன் அவர்களது நினைவிடத்தில் வடமராட்சி மக்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை மாவீரர் லெப்டினென்ட் தென்றல் அவர்களது சகோதரரும், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான சி.வேந்தன் அவர்கள் ஏற்றிவைக்க மலர்மாலையினை பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ்போல் அணிவித்ததை தொடர்ந்து பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜயகோபி, காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் ஆகியோர் அணிவித்தனர்.
தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு பிரதிநிதி க.தவராசா அவர்கள் ஆரம்பித்துவைத்ததை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
இதில் ஆயுள்வேத மருத்துவரும், தமிழ் மக்கள் கூட்டணி வடமராட்சி அமைப்பாளருமான சிவகுமார், காணி உரிமைக்கான இயக்க தலைவர் இ.முரளிதரன்,ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் திருமதி சுரேஸ்குமார், உட்பட பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



