முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (22) அவரது பிணை மனுவை நிராகரித்து இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மே 9, 2022 அன்று நடந்த போராட்டத்தின் போது, சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சில அரசு அதிகாரிகளை நஷ்டஈடு வழங்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்வாக்கு செலுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



